ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயார்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி, கடல்சார் வர்த்தகத்திற்காக வளைகுடா ஊடாக பயணிக்கும் எரிசக்தி கப்பல்களுக்கு அரசியல் அபாய காப்புறுதி மற்றும் நிதி பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குமாறு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் தடையற்ற போக்குவரத்தை வொஷிங்டன் உறுதிப்படுத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply