இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட குழுவினரில் 32 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இதுவரை 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
