நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
