யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் 2026இன் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த நிகழ்வானது பி.ப 2.00 மணியளவில் றோ.க.த.க பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகும்.
யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் முதல்வர் திரு. க.நித்தியானந்தன் தலைமையில் நடைபெறும் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் வலயக் கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு. இரட்ணாயகம் கணேசலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
மேலும் பல பிரமுகர்கள் கலந்துகொள்ளும் யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
