பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதிரிகிரிய, மீகஸ்வெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று (18) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்புகளைச் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவை சேகரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைதான நபர் இன்று (19) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
