மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுமி மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
