விலங்கு வேட்டையாளர்கள் மற்றும் வனவள உத்தியோகத்தர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு

கதிர்காமம் – கட்டகமுவ பகுதிக்கு அருகில் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுபவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விலங்கு வேட்டையாளர்களால் இரு மான்கள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாகவும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir