இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்டது யாழ்தேவி
யாழ். மாவட்டத்திலிருந்து முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகள் கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த…
பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரல்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய…
தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி
மேல் மாகாணத்தில் தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது….
தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி
தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது…
கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் – சஜித் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி – மக்களை அச்சுறுத்தி – வருத்தி – துன்புறுத்தி நேர்மையில்லாத – முறை தவறிய கொடுங்கோன்மை…
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.
இலங்கையின் தற்போதைய நிலைமையில் அனைத்து விவசாயா உற்பத்திகளையும்அதிகரிக்க வேண்டிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் /மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முல்லைத்தீவு…
கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது
கந்தப் பெருமானின் அருள் கொண்டு இவ்வாண்டும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா நடைபெறவுள்ளது. ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆடிவேல் எசல விழாவைக்…
யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு!
யாழ்.கொடிகாமம் வெள்ளாம் கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து
காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகளை முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்….
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில் நிறந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த விடையம் தொடர்பாக விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் நேற்று சனிக்கிழமை (6) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,, விடத்தல் தீவு கிராமத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில் நிறந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாட்டினால் எமது கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. மேலும் எமது கிராமத்தில் வசிக்காத நபர்களுக்கும் குறித்த பகுதிகளில் காணி வழங்கப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் காரணமாக எமது கிராமம் பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எமது கிராமத்தில் உள்ள குறித்த காணி வளங்களை எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பயன் படுத்துவதற்கும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவர்கள் இடையூறுகள் இன்றி அவர்கள் தொழிலை மேற்கொள்ளுவதற்கும், எமது கரையோர பகுதிகளை அண்டிய காணிகளை எமது சங்கத்தின் பொறுப்பில் பரமாறிக்கும் வகையில் ஆவணம் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனை வினவிய போது,,,,. குறித்த பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மீன் வாடிகள் காணப்பட்டது.தற்போது புதிதாக வந்த சிலர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்று வருகின்றனர். சட்ட அடிப்படையில் காணிக்கான முழு அதிகாரமும் பிரதேச செயலகத்திற்கே உள்ளது. கடற்கரையை அண்டிய பகுதியாக இருந்தால் பிரதேசச் செயலகத்தினால் ஒரு வருடத்திற்கு குத்தகை என்ற அடிப்படையில் கொட்டு வாடி அமைக்க வழங்க முடியும். நிறந்தர கட்டிடம் அமைக்க முடியாது. ஆனால் தற்போது குறித்த பகுதியில் நிறந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக எனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை. பிரதேசச் செயலகத்திற்கு குறித்த காணியின் அதிகாரம் காணப்படுகின்றமையினால் கடல் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்தே நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.வருட குத்தகைக்கு வழங்க முடியும்.ஆனால் குறித்த பகுதியில் நிறந்தர கட்டிடங்கள் எவையும் அமைக்க முடியாது.
கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று (07) பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில்…
