காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ஆணைக்குழு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய சட்டவரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையேனும் பூர்த்தி செய்வதற்குத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபில், பொறுப்புக்கூறல் குறித்தோ அல்லது மன்னிப்பு அளித்தல் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இது காணாமல்போனோரின் உறவுகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் கூட்டமைபின் ஊடகப்பேச்சளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்கட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர்,

“தென்னாபிரிக்காவை ஒத்த முறையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் சமர்ப்பித்த யோசனைக்குக் கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும் அடிமட்டத்தில் எதுவுமே நிகழவில்லை. அதேவேளை, யாருடனும் கலந்துரையாடாமல், சில புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply