மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த பகுதியின் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன.
இதனையடுத்து, நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு வீதிகளில், பல மணித்தியாலங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீரேந்துப் பகுதியான மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான,பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கனத்த மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மரே ஓயா, நல்லதண்ணி ஒயா மற்றும் சிறிய ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.