இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கு விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
இந்த சப்பிற்கான ரணிலின் அழைப்பை மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலம் தெரியவருகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.
ஜனாதிபதியினால் மேற்படி கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.