இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவுடன் கைகோர்க்கத் தயாராகும் அமெரிக்கா!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதுடன், கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல், பொருளாதாரத்திற்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை போன்ற நாடுகளுக்கு உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு மேலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply