முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி நீதிமன்ற கட்டளையை மீறி தற்போதும் அங்கு இலங்கை இராணுவத்தின்ர் நிலைகொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த பகுதியில் புதிய கல்வெட்டு ஒன்றும் பதிக்கப்ட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாக குருந்தூர் மலையில் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் முயற்சி இடம்பெற்று வருகின்றமை அப்பட்டமாகப் புலப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
அதேவேளை, அங்கு செல்பவர்களின் வாகனங்களையும் இராணுவத்தினர் பதிவு செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற கட்டளையை மீறி அமைச்சா விதுர விக்ரமநாயக்க புத்தர் சிலையை வைத்ததுடன், இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் பாரியளவிலான பௌத்த விகாரையும் இரகசியமாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில், அங்கு தற்போது, புதிதாக கல்வெட்டு ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குருந்தூர் மலையில் சட்ட விரோத நில அபகரிப்புடன் பௌத்த மயமாக்கலும் தொடர்ச்சியாக இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.