எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி மற்றும் நாட்டை வெற்றியடைய செய்யக்கூடிய நாட்டை நேசிக்கும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
வர்த்தகர்கள், தொழிசார் நிபுணர்கள், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக மாறியுள்ளனர்.
அதேவேளை கோட்டாபய ராஜபக்ச போராட்டத்தை அடக்கவில்லை என்ற போதிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டத்தை வெற்றிகரமாக அடக்கினார்.
அவருக்கு இருந்த முதல் சவால் போராட்டத்தை அடக்குவது. அதனை அவர் வெற்றிகரமாக செய்தார்.
ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்துள்ளது. தவறுகளை அடையாளம் கண்டு, அவற்றை சரி செய்து, அரசியலில் முன்நோக்கி செல்வது தனது நோக்கம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.