தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசத்துரோக அமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் கிளை  எனவும், நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் தேசத்துரோக அமைப்பு எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசத்துரோக அமைப்பு. எனவே, அக்கட்சியின் முடிவுகள் தொடர்பில் யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

விடுதலைப்புலிகளுக்கு இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அதனை தற்போது கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்கின்றது.

அதேவேளை, பிரபாகரன் முன்னிலையிலேயே கூட்டமைப்பினர் பதவியேற்றனர்.

ஆகவே அவர்கள் கூறுவது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply