
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றும் இன்றும் 14,000 க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாகவும், 50,000க்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் அதிகளவான மின்தடைகள் பதிவாகியுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.