வடக்கு கிழக்கில் வளங்கள் இருந்தும் அதிகாரம் இல்லாமலேயே வாழ்கின்றோம்!

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்தியாவில் மேகல்யா என்னும் நகரத்தில் T20 என்னும் அமைப்பின் விசேட அழைப்பின் பெயரில்,  காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை பிரச்சினைகளில் தொடர்புடைய பங்குதாரர்களிடையே ஓர் புரிதலை உருவாக்கும் விதத்தில் நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எதிர்கால சந்ததியினருக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

அங்கு அறிக்கை ஒன்றையும் அவர் வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இலங்கையும் இவ்வாறனதொரு காலநிலை மாற்றம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவதாக இருந்தால் எமது மக்களில் சில வாழ்வாதார நடவடிக்கைகள் தாக்கம் செலுத்துவதாக இருப்பினும் அதற்கான மாற்று திட்டத்தை கரிசனையில் கொள்வதன் மூலம் நாமும் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வழங்கமுடியும்.

மேகல்யா எனப்படும் இம்மாநிலம் 70 களில் உருவாக்கப்படதாகும். இந்த மாநிலம் அங்கு காணப்படும் வளங்களை கொண்டு மிகவும் அபிவிருத்தி அடைந்த இடமாக காணப்படுகின்றது.

இதே போன்று எமக்கும் எமது வட கிழக்கு மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவார்கள் எனில் எம்மாலும் குறிப்பிட்ட சில காலங்களுக்குள் எம்மாலும் பாரிய அபிவிருத்திகளை உருவாக்க முடியும் என்பதனை எமது நாட்டின் அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமலேயே இருக்கின்றோம்.

இதனையே எமது கட்சியான தமிழரசுக் கட்சியும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றது.

குறிப்பாக எமது நாட்டில் நடக்கும் சட்டவிரோத மண் அகழ்வு பற்றியும் குறித்த செயலமர்வின் கவனத்தில் கொண்டு சென்றிருந்தேன்” எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply