மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி இடப்பெற்ற பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
” போராட்டக்காரர்கள் இந்த நாட்டின் பலத்தையும் கலாச்சாரத்தையும் அழித்தார்கள். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்கியவர் மகிந்த ராஜபக்ச.
அது மாத்திரமன்றி, வளர்ந்த பிள்ளைகளின் கல்வியை உயர்த்தும் வல்லமை படைத்த தலைவர், மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்திய இந்நாட்டின் உரிமைகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்த தலைவர்.
நீங்கள் எங்கள் பலம். இன்று பொலன்னறுவை இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கட்சி வணக்கம் செலுத்துகிறது.
இந்த நாட்டை பாதுகாக்க, இந்த நாட்டின் பலத்தை பாதுகாக்க, நமது எதிர்கால சந்ததியை பாதுகாக்க நாங்கள் விரும்பினோம். இப்போது, காலனித்துவவாதிகளின் டொலர்களின் கீழ் ஒரு தலைமுறை பிறந்துள்ளது.
அவர்கள் மூலம் சமூக வலைதளங்கள் மூலம் எங்களை அவதூறாகப் பேசுகின்றனர். கலாச்சாரத்தை அழித்து சமூக பலத்தை அழித்து இந்த நாட்டை அழிக்க காலனியாதிக்கவாதிகள் முயற்சிக்கின்றனர். மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். இது மிகவும் சவாலானது.
அதற்காக நாம் பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் நீங்கள் எமக்கு பலம் கொடுக்கும் வரை நாங்கள் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகி இலங்கையின் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பிடிப்போம் என உறுதியளிக்கின்றோம் ” எனக் குறிப்பிட்டார்