பணத்திற்காக வீதியில் இறங்கி போராடிய தாய்மார் நாம் இல்லை – எமக்கு நீதியே வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஒருபோதும் மரணச்சான்றிதழையோ நட்டஈட்டையோ பெற்றுக்கொள்ள தாங்கள் தயார் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

தாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதழ் மற்றும் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள தயார் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும், நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள்(ஓ.எம்.பி) மரணச் சான்றிதழ் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு பேசியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களின் பேச்சுக்கள் தம்மிடம் செல்லுபடியாகாத காரணத்தினால் அதனை தொடர்ந்து ஒவ்வொரு அம்மாக்களையும் அழைத்து பேச்சு நடத்தினர்.

அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் தற்போது அரச திணைக்களங்களை அழைத்து பேசுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் மற்றும் நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறித்த மரண சான்றிதழ் மற்றும் நட்ட ஈடு தங்களுக்கு தேவை இல்லை என்பதை ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளுக்கு தாங்கள் தொடர்ந்தும் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் பேசியும், முடியாத நிலையில், தற்போது திணைக்களங்களை அழைத்து பேசிவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். தாங்கள் ஒரு போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போக மாட்டோம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தாங்கள் நீதியையே கேட்டு நிற்பதாகவும், தமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது?, தாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு காசுக்காக போராடும் உறவுகளும் தாங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் சகல விதத்திலும் தங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அது பயனளிக்காத நிலையில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக தங்களிடம் பேச முற்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply