தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப் பறிப்பதற்கு முயல்கின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவை வைத்து இலங்கையை மிரட்டலாம் எனவும் சம்பந்தன் குழுவினர் எண்ணுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை இறைமையுள்ள நாடு. எமக்கென்று ஒரு ஜனாதிபதி உள்ளார்.
அரசாங்கம் உண்டு. பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான நாடாளுமன்றமே முடிவு செய்யும் என அமைச்சர் பந்துல தெரிவித்தார்.