பௌத்த மயமாக்கலுக்குள் பறாளாய் முருகன் – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆலயத்திற்கு நேரடி பயணம் மேற்கொண்டு, கோவில் தர்மக்கர்த்தா சபையினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் -சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது பௌத்த அடையாளங்களை வடக்கு, கிழக்கில் உருவாக்கி அதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் “இது பௌத்தர்கள் வாழ்ந்த பூமி” என நிரூபிக்கும் ஏற்பாடாகத்தான் தாம் இதை பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து , புத்தர் சிலைகளை நிறுவி , முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் சில வருடங்களில் தமிழர்கள் வாழும் பகுதி பௌத்த மயமாக்கப்படும். பெரும்பான்மையினரின் அடக்கு முறையின் கீழ் சிறுபான்மையினர் வாழ்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அடையாளமாய் திகழும் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வரத்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply