இந்தியாவுடன் கைகோர்க்கத் தயாராகும் அநுரகுமார!

இலங்கைக்கு மிகவும் அருகைமையில் உள்ள நாடு இந்தியா. ஆகவே தெளிவான பார்வையுடன் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டை நாசமாக்கி, திட்டமிட்ட முறையில் நாட்டை பரிதாப நிலைக்கு இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடாக மாற்றியுள்ளனர். இவர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்ப்பதுடன், தமது அணியை வெற்றிபெறவும் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை தாங்கள் முழுமையாக அறிந்துள்ளதாகவும். இந்த அவலநிலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீரழிந்த அமைப்பை மாற்றாவிட்டால் யார் மாற்றுவார்கள் எனக் கேள்வியெழுப்பியதோடு, இந்த நேரத்தில் தாம்தான் அதனை செய்ய வேண்டும்  ஊழல்வாதிகள் ஒருபோதும் நாட்டை சீர்திருத்த மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் ரீதியாகவும், இந்தியா அருகாமையில் இருப்பதாலும் அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்துவதாலும் சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியாவுடன் பணியாற்ற தாம் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஓகஸ்ட் மாத்தின் தொடக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். 

ஒரு சிக்கலான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் தெளிவான பார்வையுடன் ஆட்சியாளர்களை தெரிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply