மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது.

வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்டப் பாதை ஊடாக தபாலகம் வைத்தியசாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.

இப்போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply