இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி நிறுவனம் ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கும் காலங்களில், அதன் தேவைகள் குறித்து இந்தியா மிகவும் கரிசனை கொண்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடன் நெருக்கடி, வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரும் சிக்கலுக்குரிய விடயம் எனத் தெரிவித்த அவர், வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்க தாம் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடனில் மூழ்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ ஒரு உறுதியான கட்டமைப்பை உருவாக்க இந்தியா எதிர்பார்க்கிறது என அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.