இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சனல் 4 தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, செப்டம்பர் ஐந்தாம் திகதி பிரித்தானிய நேரப்படி 11.05 மணிக்கு இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திகதி ஒத்திவைக்கப்பட்டது.
“Sri Lanka’s Easter Bombings – Dispatches” என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடக செயலாளராக இருந்த ஆசாத் மௌலானாவின் பல தீவிரமான வெளிப்பாடுகள் இந்த ஆவணப்படத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலும் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உட்பட பல அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இந்த ஆவணப்படத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.