வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர் இடம்பெற்று வரும் நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்துடன் பலரைப் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றுள்ளர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல், தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 6ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் உயிர் இழப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், வட காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் 10 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.