நாடாளுமன்றம் அருகே நடத்த திட்டமிடப்பட்ட ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு செல்லும் வீதிக்கு அருகில் இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு திட்டமிட்ட போராட்டத்தினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் எடுத்ததன் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் கே.பி.எஸ். ஹர்ஷன் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தார்.

இருப்பினும் அமைதியான போராட்டங்கள் தடை செய்யப்படவில்லை எனவும் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட மாட்டாது எனவும் நீதிமன்ற உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட எட்டு ஆசிரியர் முதன்மை தொழிற்சங்கவாதிகள், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, மற்றும் அதிபர் சேவைகள் சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமதிலக்க ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply