ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தார்.
அவர் அண்மையில், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.