சீரற்ற வானிலையால் 20,000இற்கும் அதிகமானோர் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20,000இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 57 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,300 ஆக பதிவாகியுள்ளது.

குடும்பங்களாக கணக்கிடுகையில் 6,785 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு மரணம் பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பதிவானதோடு, ஏனைய மரணம் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், 22 பாதுகாப்பு முகாம்களில் 1,165 பேர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களின் தலைமையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply