இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா, கிராமிய வறுமை ஒழிப்பு, கல்வி, எரிசக்தி, வடக்கு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற சந்திப்பின் போது உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் (Martin Raiser) இதனைத் தெரிவித்தார்.