யாழில் இடம்பெறும் வர்த்தக கண்காட்சி!

‘வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சியில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்திருந்தார்.

15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல், இரவு 08.30 மணி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்த வர்த்தக கண்காட்சியில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி 300க்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த கண்காட்சியில் கழிவு முகாமைத்துவ நிலையங்கள் கண்காட்சி நடைபெறவுள்ள தினங்களில் உங்களிடம் உள்ள பிளாஸ்ரிக் கழிவுகளை கொண்டு வந்து ஒப்படைத்து பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க பங்களிப்பு செய்யும்படி கோருகிறோம் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply