அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க வார இறுதி நாட்களிலும், எதிர்காலத்தில் இரவு நேரங்களிலும் சுற்றிவளைப்புக்களை நடாத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக சிறப்புக் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முகவர்களை அனுப்பி மொத்த அரிசி விற்பனை நிலையங்களை ஆய்வு செய்யவும், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பல்பொருள் அங்காடிகள் உட்பட சில்லறை மற்றும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply