சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அவர்கள் நேற்று (09) காலமானார்.

அன்னார் உயிரிழந்த போது அவருக்கு வயது 62 ஆகும்.

40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய இவர், தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.

உயிரிழக்கும் போது இவர் வீரகேசரியின் யாழ்.பிராந்திய கிளையின் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றியிருந்தார்.

அவரது மறைவு ஊடகத்துறையில் பெரும் இழப்பாகும். இவரது உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply