ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

2025ஆம் ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு (துபாய்) பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply