
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (15) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ் வருகை தந்துள்ள பிரதமர் முதலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து, அதிபருடன் கலந்துரையாடிய அவர் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்பு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இன்று மாலை சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.
நாளை (16) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.