
கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை, கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக் குழுக்களுக்கு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பிலான கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் சிசிடிவி காட்சிகள், கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் பதிவாளரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.