
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் தொடர்பில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 27 வயதான சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்பவர் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றவியல் பிரிவால் விவாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அதன்படி, குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று கந்தானை பொலிஸ் பிரிவின் வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.