
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள இறக்காமம் ஊரில் உள்ள, இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்கள் சமூக விஞ்ஞானப் போட்டியில் சாதனை படைத்தது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு ( 2024) நடை பெற்ற அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டியில் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்கள் முறையே 3ஆம், 4ஆம் நிலைகளைக் பெற்று சாதனை பண்டைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ( 2024) நடை பெற்ற இந்த போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த போட்டியானது கல்வி அமைச்சின் 2012/20ஆம் சுற்று நிருபத்திற்கமைவாக மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பிரிவின் வழிநடாத்தலில் நாடு முழுவதும் பரவலான வகையில் தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படுகினறமை குறிப்பிடத் தக்கதாகும்.
சமூக விஞ்ஞானப் பாடங்களான வரலாறு, குடியியல், புவியியல் போன்ற பாடங்களோடு இணைந்ததாக சமகாலத் தகவல்கள் தொடர்பாக ஆசிரியர்களையும், மாணவர்களினதும் ஈடுபாட்டை விருத்தியடையச் செய்யும் நோக்கில் நாடாளவிய ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்களான A.W.பாத்திஃ, R.M.ஆயிஷா, M.K.M.யூசுப்சயான் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.