
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சராக பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அதன்படி, பெப்ரவரி 18 ஆம் திகதி முதல், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதன் இறுதி நாளாகும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.