
எமது எதிர்கால பயணத்தின் அடிப்படை என்ன என்பதையே வரவு செலவு திட்டம் சுட்டிக்காட்டுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளின் தொடர்ச்சியை நாங்கள் முன்வைப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
அந்த வாதத்தை உருவாக்கும் எதிர்க்கட்சி எங்கள் தொலைநோக்கு பார்வையை புரிந்துக்கொள்ளவே இல்லை.
புள்ளிவிவரங்களுக்கு அப்பால் சென்று வரவு செலவு திட்டத்தின் பின்னணியில் உள்ள சிந்தனையைப் படிக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.
எங்களுடைய எதிர்கால பயணத்தின் அடிப்படை என்ன என்பதை வரவு செலவு திட்டம் சுட்டிக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.