
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேகொள்ளவுள்ளார்.
அதன்படி ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்தின் போது இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாற்றும் பிரதமர் ஹரிணி அமரசூர்ய முதலானோரை சந்திக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக இந்தியாவில் இருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று நாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.