
இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர்கள் பருவச் சீட்டுகளை வைத்திருப்போர் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லாதது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு குடிமகனும் 1958 என்ற எண்ணிற்கு அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இவ்வாறான தவறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததோடு, இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.