ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு!

தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு  குடியிருப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில், சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் தனது நன்றியை பகிர்ந்து கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir