கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் (VAPA) வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட, 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது பிரிவிற்கு இணங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐந்தாண்டு காலத்திற்கு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்னவுக்கு இதற்கான நியமனக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
