அமெரிக்காவில் புழுதிப் புயலால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் திடீரென வீசிய புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதால் சங்கிலித் தொடர் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் வாகன நெரிசலில் உடல் நசுங்குண்டு 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்காகோவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஃபோர்மர்ஸ்வில்லி நகருக்கு அருகே இண்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தொடராகச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரெனப் பலத்த காற்று வீசியதால் புழுதிப் புயல் உருவானது.

குறித்த பகுதியே புகை மூட்டமாகக் காணப்பட்டதால், பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துச் சம்பவித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply