கலிபோர்னியாவில் சிறிய ரக விமான விபத்து – மூவர் பலி

கலிபோர்னியாவில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், Beechcraft  A36 ரகச் சிறிய விமானமானது, பிக் பயர் விமான நிலையத்துக்கு அருகேயுள்ள உல்லாசப் பயணிகள் வருகை தரும் விடுதி ஒன்றின் வெறுமையான தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ தினத்தன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்துத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கலிபோர்னியாவில் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாகச் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply