இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானிய இராணுவம் குறித்து இழிவாகப் பேசியமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானிய நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்ததால், அவரது கைது நடவடிக்கைகள் தாமதமாகியிருந்தன.
இந்த நிலையில், இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான் கான் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையைத் தடுக்க முயன்றபோது அவரது வழக்கறிஞரும் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
T01