பொரளை, சிறிசர உயன பகுதியில் வீடொன்றினுள் 28 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில் சந்தேக நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பதிவுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
T01