இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Prednisolone எனும் கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த கண் சொட்டு மருந்தை மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.