டொலர் மற்றும் மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சந்தைகளில் பிஸ்கட் விலையை குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, 8 முதல் 15 சதவீதத்தால் பிஸ்கட் விலை குறைவடையவுள்ளதாக குறித்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதற்கமைய, புதிய விலை அடங்கிய பிஸ்கட் நேற்று முதல் சந்தைகளில் விற்பனை செய்ய விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி பிஸ்கட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.